கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையினால் அலிகாரில் உள்ள பள்ளிகளை மூட வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இடி, மின்னல் மற்றும் கனமழையால், வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்தனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, மேற்கு உத்தரப் பிரதேசத்தில், நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 140 மி.மீ மழை பதிவானதாக எட்டாவா கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

இதே போல் ஆக்ராவிலும் மழை பதிவாகியுள்ளது. அலிகார் மாவட்டத்தில் பெய்த கனமழையால், நகரின் பல தாழ்வான பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் தண்ணீர் தேங்கி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் சனிக்கிழமை வரை மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இந்தர் வீர் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school leave for heavy rain


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal