#BREAKING: இந்திய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய புதிய குழு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அவர்களின் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த மனுவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரத்தை வரையறுக்கும் இந்திய தேர்தல் ஆணைய சட்டம் 1991-ன் படி பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும் வரை பதவியில் நீடிக்கலாம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர்கள் குறுகிய காலமே பதவியில் இருக்கும் படி நியமிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக இதில் சீர்திருத்தம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர். குறிப்பாக புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அருண் கோயல் எதன் அடிப்படையில் நியமிக்கப்பட்டார். அவர் நியமனத்தில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என மத்திய அரசு தரப்பிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணையின் இறுதியில் இந்திய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த நீதிபதிகள் இந்திய தேர்தல் ஆணையர் நியமனத்தில் இருக்கும் முரண்பாடுகளை தளர்த்தும் வகையில் இந்திய பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய கொண்ட குழு மூலம் இந்திய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC ordered form new committee to select election commissioner


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->