"மாதவிடாய் விடுப்பு சட்டம்: பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்" - உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு வழங்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, உச்சநீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள்:
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, இத்தகைய சட்டம் மனிதாபிமான அடிப்படையில் தோன்றினாலும், நடைமுறையில் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும் எனப் பின்வரும் காரணங்களைச் சுட்டிக்காட்டியது:

வேலைவாய்ப்பு பாதிப்பு: "மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு அளிக்கும்படி சட்டமியற்றினால், நிறுவன உரிமையாளர்கள் பெண்களை வேலைக்கு அமர்த்தத் தயங்குவார்கள். இது பெண்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பறிக்கும்".

உளவியல் தாக்கம்: இத்தகைய சட்டம், பணியிடங்களில் ஆண்களை விடப் பெண்கள் 'தாழ்ந்தவர்கள்' அல்லது 'பலவீனமானவர்கள்' என்ற தவறான பிம்பத்தை உருவாக்கி, அவர்கள் மீது உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சந்தை நிலவரம்: அரசியலமைப்புச் சட்டப்படி பெண்களுக்கு உரிமைகள் இருந்தாலும், நிதர்சனமான சந்தை நிலவரத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும். இது பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பைக் குறைக்கக்கூடும்.

கட்டாயமாக்க முடியாது:
சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து இத்தகைய விடுப்பை வழங்குவதை நீதிமன்றம் வரவேற்றது. இருப்பினும், "விழிப்புணர்வு ஏற்படுத்துவது வேறு, சட்டத்தைக் கட்டாயமாக்குவது வேறு" எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதுவரை இக்கோரிக்கையுடன் எந்தப் பெண்ணும் நீதிமன்றத்தை அணுகவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SC Dismisses Plea for Mandatory Menstrual Leave Cites Risks to Women’s Employment


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->