பான் மசாலா, குட்கா பேக்கிங்கில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை: உணவுப் பாதுகாப்பு ஆணையம் அதிரடி!
FSSAI Draft Proposal Ban on Plastic Packaging for Pan Masala and Tobacco Products
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பான் மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்களை பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறைகளுக்குத் தடை விதிக்கும் வகையில் புதிய வரைவு திருத்த மசோதாவை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு மற்றும் பேக்கிங் தரநிலைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விதிமுறைகளில் மாற்றங்கள் (Changes in Regulations)
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் (பேக்கிங்) விதிமுறைகள், 2018-ல் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, பேக்கிங்கிற்குப் பயன்படுத்தப்படும் பின்வரும் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது:
அலுமினியம் ஃபாயில் (Aluminum Foil).
பாலிஎத்திலீன், பாலியஸ்டர் மற்றும் பாலிபுரோபைலின் போன்ற பிளாஸ்டிக் உட்பொருட்கள்.
இயற்கை மாற்றுகள் (Natural Alternatives)
தடை செய்யப்பட்ட செயற்கைப் பொருட்களுக்குப் பதிலாக, சூழலுக்கு உகந்த மற்றும் இயற்கை முறையில் கிடைக்கப்பெறும் பொருட்களைப் பயன்படுத்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது:
காகிதம் மற்றும் காகித அட்டைகள்.
செல்லுலோஸ் சார்ந்த பொருட்கள்.
இவை குறித்த விரிவான பட்டியல் மற்றும் பேக்கிங் விதிமுறைகள் அட்டவணை நான்கில் (Schedule IV) மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
முழுமையான தடை மற்றும் ஆலோசனைகள் (Complete Ban & Feedback)
உணவுப் பொருட்களைச் சேமிக்கவும், விற்பனை செய்யவும் மற்றும் பேக் செய்யவும் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான நெகிழி (Plastic) பொருட்களுக்கும் இந்த வரைவு மசோதா முழுமையான தடையை முன்மொழிகிறது. இந்த மசோதா குறித்துப் பொதுமக்கள் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்பினால், 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு FSSAI கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary
FSSAI Draft Proposal Ban on Plastic Packaging for Pan Masala and Tobacco Products