விவிபேட் வழக்கு.. நீதிபதிகளுக்கு திடீர் சந்தேகம்.. ECI-க்கு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நடைபெறும் மக்களவை பொது தேர்தல் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வழக்கு இன்று காலை 10:30 மணிக்கு விசாரணைக்கு வந்த போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விவகாரங்களில் எங்களுக்கு இன்னும் சில முக்கிய சந்தேகங்கள் இருக்கிறது.

மைக்ரோ கன்ட்ரோல் யூனிட் கன்ட்ரோல் யூனிட்டில் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது விவி பேடில் பொருத்தப்பட்டுள்ளதா? பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ கன்ட்ரோல் யூனிட் ஒரு முறை புரோகிராம் செய்யப்பட்டதா? தேர்தல் சின்னங்களை பதிவேற்றும் யூனிட்டுகள் எத்தனை உள்ளன? கன்ட்ரோல் யூனிட் மட்டும் சீலிடப்படுகிறதா? அல்லது விவிபேடு தனியாக வைத்து பாதுகாக்கப்படுகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.

 

இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொழில் நுட்ப வல்லுனர்கள் நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதன் காரணமாக இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆஜராகி நீதிபதிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC called it specialist for vvpat case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->