சபரிமலை டோலி தொழிலாளர் விவகாரம்: ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு!
Sabarimala Dolly Labor Issue ICourt Important Order
சபரிமலையில் மண்டல பூஜை புண்யகாலத்தை முன்னிட்டு நடை திறந்து வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில், டோலி தொழிலாளர்களின் கட்டணப் பிரச்சினை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
டோலி சேவைகள் மூலம், வயதான மற்றும் உடல் நலம் குன்றிய பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வசதி பெறுகின்றனர். ஆனால், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து, பிரீபெய்டு கட்டண நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு எதிராக, 1,500-க்கும் மேற்பட்ட டோலி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடத்தினர். இதனால், மூப்பர் மற்றும் உடல் நலக் குறைபாடுள்ள பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை காரணமாக வேலைநிறுத்தம் திரும்ப பெறப்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பாக, கேரள ஐகோர்ட்டின் தேவஸ்தான சிறப்பு அமர்வு தலையிட்டு முக்கிய உத்தரவை வெளியிட்டது.
சபரிமலை மற்றும் பம்பை பகுதி போராட்டத்திற்கான இடமாக மாற்றக் கூடாது எனக் கோர்ட்டு அறிவித்தது. பக்தர்களின் ஆராதனை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியது. விலை பேசுவது மற்றும் மிரட்டல் முறைகள் ஆகியவை ஏற்க முடியாதவை என கோர்ட்டு கண்டித்தது.
டோலி தொழிலாளர்கள், பக்தர்களை நடுவழியில் இறக்கி வைத்து பணம் கேட்பது தகுந்ததல்ல.இவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.டோலி தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து சீசன் தொடங்கும் முன்பே தீர்வு காண வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தியது.
சபரிமலையில் பிரீபெய்டு கட்டண அமைப்பு விரைவில் அமல்படுத்தப்படும். பக்தர்களின் பாதுகாப்புக்கும் வசதிக்கும் தேவஸ்தானம் விரைவில் புதிய திட்டங்களை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலையில் பக்தர்களின் ஆராதனை அனுபவம் பாதுகாக்க அனைத்து தரப்புகளும் ஒத்துழைக்க வேண்டும் என கோர்ட்டு வலியுறுத்தியுள்ளது.
English Summary
Sabarimala Dolly Labor Issue ICourt Important Order