மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு.. இனி இந்த சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே மதுபானங்கள் விற்பனை.!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. கேரளாவில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் தினசரிகொரோனா பாதிப்பில் 50 சதவீதம் பேர் கேரளா மாநிலத்தில் மட்டும் பதிவாகிறது. ஆகையால், கேரள அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கில் அம்மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது. அதில் கேரளாவில் உள்ள மதுக் கடைகளுக்கு செல்பவர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவளை  போட்டு கொண்டதற்கான சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இனிமேல் தடுப்பூசி அல்லது கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rtpcr test report for buying liquor


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal