கரூர் சம்பவ வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து அவதூறு கருத்து - ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கைது.!!
rtd police officer arrest for defamatory comments against judge
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தவெக தலைவர் விஜய் குறித்து கண்டனங்களை முன்வைத்தார்.

இந்த நீதிபதி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் பரபரப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சென்னை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரான அஸ்தினாபுரம் சசிகுமார், தவெக, ஐ.டி.விங்கை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட், தூத்துக்குடி வேம்பூரை சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக கோடம்பாக்கத்தை சேர்ந்த வரதராஜன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் காவல்துறையில் கைரேகை பிரிவில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது தெரிய வந்துள்ளது.
English Summary
rtd police officer arrest for defamatory comments against judge