கொண்டாட்டத்தில் நேர்ந்த கோரம்...! குடிக்க தண்ணீர் தராத ஆத்திரத்தில் சிறுவனை சுட்டுக்கொன்ற குடிகார மாமா...!
riot broke out during celebration drunk uncle shot and killed boy rage not giving him water drink
உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டம் யகுத்கஞ்ச் கிராமத்தில் வசித்து வரும் ஜஸ்வீர் கோலாவின் இல்லத்தில், அவரது மற்றொரு மகனுக்கான பெயர்சூட்டும் விழா நேற்று உற்சாகமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் உறவினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்களில், கோலாவின் உறவினராகிய தனேஷ் யாதவ் எனப்படும் ராம்பரோசிலால் யாதவ் என்பவரும் ஒருவர்.

அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்த தனேஷ், 9 வயதுடைய யஷ்பால் என்ற சிறுவனை அழைத்து தண்ணீர் கொண்டு வரும்படி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், சிறுவன் அதற்கு இணங்காமல் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திடீரென ஆத்திரமடைந்த தனேஷ், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, சிறுவனின் வயிற்றில் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சத்தமும், சிறுவனின் அலறலும் கேட்டு பதறிய உறவினர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, ரத்தத்தில் துடித்துக் கொண்டிருந்த யஷ்பாலை கண்டனர்.
உடனடியாக அவரை மாவட்ட மருத்துவமனைக்கும், பின்னர் மேல்சிகிச்சைக்காக அலிகார் நகரில் உள்ள மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.ஆனால் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல், நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் குற்றவாளி தனேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து காவலர்கள் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடத்தியதில், சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. குடும்ப விழா துயரமாக மாறிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
riot broke out during celebration drunk uncle shot and killed boy rage not giving him water drink