₹2,000 நோட்டு மாற்ற கடைசி வாய்ப்பு... ரிசர்வ் வங்கியின் முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. 

அதன் பிறகு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் வழங்கியது ரிசர்வ் வங்கி. 

அதன் பிறகு வங்கிகள் மூலம் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கணக்கு முடிப்பதால் அன்றைய தினத்தில் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது எனவும், அது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI announced rs2000 note exchange temporary withdraw from April1


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->