ரத்தன் டாடா எனது ஹீரோ - கமல்ஹாசன்! - Seithipunal
Seithipunal


டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார்.  

இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான காலம் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரத்தன் டாடா ஜி என்னுடைய தனிப்பட்ட ஹீரோ என்றும், என் வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்தவர் அவர் என்று கூறியுள்ளார்.

மேலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரின் பங்களிப்புகள் என்றென்றும் நவீன இந்தியாவின் கதையில் பொறிக்கப்படும் ஒரு தேசிய பொக்கிஷம் என்றும், அவரது உண்மையான செல்வம் பொருள் செல்வத்தில் இல்லை மாறாக அவரது நெறிமுறைகள், நேர்மை, பணிவு மற்றும் தேசபக்தி ஆகியவற்றில் உள்ளதாக புகழாரம் தெரிவித்துள்ளார்.

 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, நான் அவரைச் சின்னமான தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தபோது சந்தித்தேன். தேசிய நெருக்கடியின் அந்த தருணத்தில், டைட்டன் நிமிர்ந்து நின்று, ஒரு தேசமாக மீண்டும் கட்டமைக்க மற்றும் வலுவாக வெளிப்பட, இந்திய ஆவியின் உருவகமாக மாறியது.

ரத்தன் டாடாவின் குடும்பத்தினர், நண்பர்கள், டாடா குழுமம் மற்றும் எனது சக இந்தியர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ratan tata is my hero kamal haasan


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->