மும்பை விமான நிலையத்தில் அரியவகை உயிரினங்கள் பறிமுதல்.!! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் அரியவகை உயிரினங்கள் பறிமுதல்.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை விமான நிலையத்திற்கு அரியவகை உயிரினங்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அந்தத் தகவலின் பேரில் அதிகாரிகள் சரக்கு பார்சல் பிரிவிற்கு சென்று சோதனை செய்தனர். 

அப்போது அந்த பார்சலில் வெளிநாட்டை சேர்ந்த 306 அரியவகை உயிரினங்கள் உயிருடன் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சிறியவகை ஆமைகள், 110 நத்தைகள், 30 நண்டுகள் உள்ளிட்டவை அடங்கும். இந்த அரியவகை உயிரினங்களை கடத்த முயன்ற நபர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வனவிலக்கு குற்ற கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகள் தெரிவித்ததாவது:- "கைப்பற்றப்பட்ட உயிரினங்களின் நலனை கருத்தில் கொண்டு அவைகள் ரெஸ்கியுவ் அசோசியேஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அந்த உயிரினங்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். 

பிடிபட்ட உயிரினங்கள் இந்தியாவை சேர்ந்தவை அல்ல. அவற்றை இங்குள்ள காட்டுப்பகுதிகளுக்குள் விட முடியாது. அதனால், அவை பிறந்த நாட்டிற்கோ அல்லது கொண்டுவரப்பட்ட நாட்டிற்கோ திரும்பி அனுப்பப்பட வேண்டி இருக்கலாம்" என்று தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rare species seized in mumbai airport


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->