''மகளிர் சக்தியின் அதிகரித்து வரும் பங்களிப்பு விமானப்படையை மேலும் வலுப்படுத்தி, வலிமையானதாக மாற்றும்'' ; ராஜநாத் சிங் புகழாரம்..! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின், துண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியில் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு அகாடமியின் முதல் தொகுதி பெண்கள் உட்பட மொத்தம் 231 விமானப் பயிற்சி மாணவர்கள் (194 ஆண்கள், 37 பெண்கள்) விமானப்படையில் இன்று அதிகாரிகளாகப் பதவியேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 217-வது பயிற்சிப் பிரிவின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பைப் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அங்கு உரையாற்றிய போது ''மகளிர் சக்தியின் பங்கேற்பு விமானப் படையை மேலும் வலிமையானதாக்கும்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த பட்டம் வழங்கும் விழாவில் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகளுக்கும், இந்திய கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 3 அதிகாரிகளுக்கும், வியட்நாம் சோசலிச குடியரசைச் சேர்ந்த 02 அதிகாரிகளுக்கும் விருது வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது;

விமானப் படை தேசத்திற்கு கேடயமாகவும், வாளாகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்றும், புதிய சவால்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்என்றும், சூழ்நிலைக்கேற்ப தங்கள் நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நவீன போரில், எதிரியோ அல்லது பயன்படுத்தப்படும் ஆயுதமோ பெரும்பாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை. ரேடார்கள், செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள், சென்சார்கள், ரோபோடிக்ஸ் போன்ற அமைப்புகள், போரிடும் தரப்பினரையோ அல்லது அவர்களின் இயந்திரங்களையோ கண்டறிவதை சாத்திய மற்றதாக்குகின்றன. நிச்சயமற்ற தன்மைகளையும் எதிர்பாராத சவால்களையும் எதிர்கொள்ள பயிற்சித் திட்டங்களும் பயிற்சிகளும் நமது வீரர்களை நன்கு தயார்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து நமது வீரர்கள், எதிர்காலப் போர் முறைகளையும் உத்திகளையும் புரிந்துகொண்டு, அவற்றுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு, அவற்றை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று பெண் அதிகாரிகளுக்குச் சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், மகளிர் சக்தியின் அதிகரித்து வரும் பங்களிப்பு விமானப்படையை மேலும் வலுப்படுத்தி, அதனை மேலும் வலிமையானதாக மாற்றும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajnath Singh lauds the Air Force stating that the growing contribution of womens power will make the force stronger


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->