டெலிவரி பாயுவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ராகுல் காந்தி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. அதே போல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி ராணி, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது திடீரென டெலிவரி பாய் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி வெறுப்பு அரசியலால் மணிப்பூர் பற்றி எரிகிறது அரசியலுக்கு எதிராகத்தான் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டேன் என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi travelled delivery boy bike in Karnataka


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->