செலவும், கடனும் அதிகரித்துள்ளது. அனைத்து இந்தியர்களுக்கும் வேலை செய்யும் பொருளாதாரமே தேவை: ராகுல் காந்தி..! 
                                    
                                    
                                   Rahul Gandhi says all Indians need an economy that works
 
                                 
                               
                                
                                      
                                            ஒருவர் கேட்கும் சரியான கேள்வியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு, பொறுப்புடன் பதிலளிக்கும் அரசியலே நமக்கு தேவை என்றும், ஒரு சிலருக்காக மட்டுமில்லாமல் அனைத்து இந்தியர்களுக்காகவும் பணியாற்றும் பொருளாதாரமே தேவை என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டு, டூவிலர் விற்பனை 17 சதவீதமும், கார் விற்பனை 8.6 சதவீதமும் குறைந்துள்ளது. அதேநேரத்தில் மொபைல் சந்தையும் -7 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், செலவு, கடன் ஆகிய இரண்டும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறதவம், இதனால், வீட்டு வாடகை, வீட்டு பொருட்களுக்கான பணவீக்கம், கல்விச்செலவு என அனைத்தும் செலவு மிக்கதாக மாறியுள்ளது என்று ராகுல் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இவை அனைத்தும் சாதாரண எண் அல்ல என்றும், இவை அனைத்தும ஒவ்வொரு சாமானிய இந்தியர்களையும் நொறுங்கச் செய்யும் பொருளாதாரத்தின் உண்மையான நிலை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒருவர் கேட்கும் சரியான கேள்வியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு, பொறுப்புடன் பதிலளிக்கும் அரசியல்தான் நமக்கு தேவை. அதாவது, ஒரு சிலருக்காக மட்டும் அல்லாமல் அனைத்து இந்தியர்களுக்காகவும் பணியாற்றும் பொருளாதார கொள்கைதான் எல்லோருக்கும் தேவை என்றும் அந்த அறிக்கையில் ராகுல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Rahul Gandhi says all Indians need an economy that works