புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்.! எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள்.! - Seithipunal
Seithipunal


இன்று காந்திஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்த இருக்கின்றனர். தமிழகத்தில் நடந்த பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் புதுச்சேரி மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு இன்று ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அனுமதியின்படி, பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரியில் உள்ள பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து தொடங்கும் இந்த ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன்வீதி, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக சிங்காரவேலர் சிலையருகே நிறைவடைகிறது.

இந்த ஊர்வலத்திற்கு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமில்லாமல், சாதி, சமய வேறுபாடு இன்றி மக்கள் வாழும் புதுவை மண்ணில் மக்களிடையே பிளவை உண்டாக்க பார்க்கின்றனர்.  இதற்கு கவர்னர் மற்றும் அமைச்சர்கள் உடைந்தையாக உள்ளனர் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

puthuchery rss procession


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->