அவசியமில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம் - புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு..!
puthuchery government order peoples not go to outside
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இன்னும் மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். தற்போது ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டுள்ளது. அடுத்த 3- 4 மணி நேரத்தில் புயல் கரையை முழுமையாக கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கி உள்ளதால், பொது மக்களுக்கு புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது, பொது மக்கள் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை வரை அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
English Summary
puthuchery government order peoples not go to outside