புதுச்சேரி | சாலை ஓரம் கிடந்த பை! உள்ளே கட்டு கட்டாக லட்ச கணக்கில் 500 ரூபாய் நோட்டுகள்!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் சாலை ஓரம் கட்டு கட்டாக 49 லட்சம் ரூபாய் மதிப்புடைய 500 ரூபாய் நோட்டுகள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அண்ணா சாலை பகுதியில் சாலை ஓரம் பை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த டீக்கடை ஊழியர் பெரியசாமி என்பவரும், ஆட்டோ ஓட்டுனர் ஒருவரும் பையைத் திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது அதில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு, உடனடியாக பெரிய கடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார். பணப்பையை மீட்டனர். அந்தப் பையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் எண்ணிப் பார்த்ததில், அதில் மொத்தம் 49 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, தெற்கு பிரிவு சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த பணத்தை ஒப்படைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இந்த பணப்பையை யார் இங்கு விட்டுச் சென்றார்? இந்த பணம் முறையான வகையில் வந்ததா? அல்லது முறை தவறிய பணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பணம் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்ததில், பணப்பையை டீ மாஸ்டர் பெரியசாமி, ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் திறந்து பார்ப்பது பதிவாகியுள்ளது. யார் அந்தப் பையை அந்த இடத்தில் போட்டார் என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry Road side Money bag


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->