புதுச்சேரி தேர்தல் முடிவுகள் 2026: மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி!
Puducherry Election Results 2026 NR Congress-BJP Alliance Set to Retain Power
புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 9 அன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், காலை 10 மணி நிலவரப்படி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி 16 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மையை நெருங்கியுள்ளது.
இத்தேர்தலில் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 4 இடங்களில் முன்னிலை பெற்று முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்புகள் மற்றும் தற்போதைய கள நிலவரங்களின்படி, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
English Summary
Puducherry Election Results 2026 NR Congress-BJP Alliance Set to Retain Power