வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதல் ஏவு தளத்தில் இருந்து பி எஸ் எல் வி சி-58 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. 

இந்த ராக்கெட்டில் எக்ஸ்போ சாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் உள்ள தூசு, நிறமாலை மற்றும் மேகக் கூட்டங்களை ஆராய்ச்சி செய்ய உள்ளது. 

அதனுடன் திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி பல்கலைக்கழக மாணவிகள் வடிவமைத்த வெசாட் என்ற செயற்கைகோளும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளுடன் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. 

இதற்கான இறுதி கட்ட கவுண்டவுன் நேற்று காலை தொடங்கிய நிலையில் இன்று காலை பி எஸ் எல் வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை பொதுமக்கள், மாணவர்கள் கண்டு மகிழ்ந்தனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pslv c58 launched successfully


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->