அச்சோ போச்சே!!! தோல்வியில் முடிந்த PSLV C-61 ராக்கெட் திட்டம்...! - இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்
PSLV C 61 rocket project ended in failure ISRO Chairman Narayanan explains
ஆந்திர பிரதேசம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் 'சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையம்' உள்ளது.அதில் முதலாவது ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, இன்று காலை 5.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-61 ( PSLV C-61 )என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.மேலும், விண்ணில் ஏவப்பட்ட 101-வது ராக்கெட்டிலிருந்து 2 அடுக்கு மட்டுமே வெற்றிகரமாக பிரிந்தது.

இதில், முதல் 2 அடுக்கு மட்டுமே வெற்றிகரமாக பிரிந்தது.இந்நிலையில் 3-வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து, பி.எஸ்.எல்.வி. சி-61 ( PSLV C-61 ) ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது.
இஸ்ரோ தலைவர் நாராயணன்:
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவிக்கையில்,"இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இன்று ஏவப்பட்டது.2-வது அடுக்கு பிரியும் வரை பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டின் செயல்பாடு சரியாகத்தான் இருந்தது. 3-வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை.
3-வது அடுக்கு பிரியும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும். பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது குறித்து ஆய்வுக்கு பிறகு விரிவான அறிக்கை அளிக்கப்படும்.தவறுக்கான காரணத்தை ஆய்வு செய்து மீண்டு வருவோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், இதற்கான காரணங்களை கண்டறிந்து தொழில்நுட்ப ரீதியான ஆய்வுகளை சரிசெய்ய தேவையான அதிகாரிகளை அணுகவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
PSLV C 61 rocket project ended in failure ISRO Chairman Narayanan explains