ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்கள்.. பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கிறார்!  - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம் சென்று அங்கு நடைபெறும் விழாவில் ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

மணிப்பூரில்  கடந்த 2023 ஆண்டு மே இல் குக்கி, மெய்தேய் சமூக மக்கள் இடையே பழங்குடியின அந்தஸ்து பெறுவது தொடர்பாக இனக்கலவரம் வெடித்தது. அப்போது  260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்  ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாயினர்.

இன்னும் மணிப்பூரில் பதற்றம் தணிந்தபாடில்லை. கடந்த பிப்ரவரியில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.கலவரம் நடந்து 2 வருடங்கள் ஆகியும் பிரதமர் மோடி ஒருமுறை கூட மணிப்பூர் செல்லாததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. 
இந்நிலையில் கலவரத்தின் பின் முதல் முறைக்காக பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 13) மணிப்பூர் செல்ல உள்ளார்.

குக்கிகள் பெரும்பான்மையாக வசிக்கும் சூரசந்த்பூரில், ரூ.7,300 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.

மெய்தேய் ஆதிக்கம் செலுத்தும் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில், ரூ.1,200 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் ஃபுங்யார் மண்டல பாஜக உறுப்பினர்கள்  43 பேர் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Projects worth Rs. 8,500 crores Prime Minister Modi will launch them tomorrow


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->