கைதிகளுக்கு நேர்ந்த அவலம்...! 'உள்ளாடையோடு மட்டும் நில்லுங்க'...! - வக்கிரமாக நடந்துகொண்ட காவலர்களுக்கு மனித உரிமைகள் ஆணையம்
prisoners Stand your underwear only Human Rights Commission slams police behaving badly
கேரள மாநிலத்தில் காவலர் நிலைய சிறை அறைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் உள்ளாடைகள் மட்டும் அணிய அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை மனித உரிமை மீறலாகும் எனக் கூறி, அமரவிளா பகுதியைச் சேர்ந்த லெனின் ராஜ் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “விசாரணை கைதிகளுக்கு அடிப்படை மனித மரியாதை கூட வழங்கப்படாமல், உள்ளாடைகள் மட்டும் அணிய கட்டுப்படுத்தப்படுவது மனித உரிமைகளுக்கு எதிரான செயல். இதற்கு உடனடி தலையீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த புகாரை தொடர்ந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போது, காவல்துறைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை காவல்துறை தலைமை இயக்குநர் உறுதி செய்ய வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், விசாரணை கைதிகளை உள்ளாடைகள் மட்டும் அணிய வற்புறுத்தும் காவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் மற்றும் நீதிபதி அலெக்சாண்டர் தாமஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
prisoners Stand your underwear only Human Rights Commission slams police behaving badly