ஒரே போடு! 70 ஆண்டுகளில் எடுக்கப்படாத முடிவை பிரதமர் மோடி எடுத்தார்...! - ஜெகதீப் தன்கர்
Prime Minister Modi took a decision that has not been taken in 70 years Jagdeep Dhankar
காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக கடந்த 7ஆம் தேதி அதிகாலை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தது.

மேலும், 'ஆப்ரேஷசன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் நடத்திய இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ''ஆப்ரேஷன் சிந்தூர்'' நடவடிக்கைக்கு உலகின் பெரும்பலான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற தெளிவான தகவலை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உலகிற்கு தெரிவித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்:
இதுகுறித்து ஜெகதீப் தன்கர் அவர்கள் தெரிவித்ததாவது,"நமது சகோதரிகளின் நெற்றியில் அணிந்த குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு இந்த பூமியில் வாழ உரிமை இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடாகும். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக முழு நாடும் தேசபக்தி உணர்வோடு ஒன்றுபட்டது.
ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் அந்த நாட்டின் தலைவர்களும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதி ஊர்வலத்தில் நிற்பதைக் காண முடிந்ததால், யாரும் ஆதாரம் கேட்கவில்லை.இந்தியா மாறிவிட்டது என்று நாம் பெருமையுடன் சொல்லலாம். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது.
ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்ற கூற்றுடன் (சிந்து) நீர் விநியோகத்தை நிறுத்தியன் மூலம் கடந்த 70 ஆண்டுகளில் எடுக்கப்படாத முடிவை பிரதமர் மோடி எடுத்தார்" எனத் தெரிவித்துள்ளார்.மேலும் பிரதமர் மோடி, இந்தியாவின் பெருமையுடன் இதுபோன்ற நடவடிக்கைகளை நாடு முழுவதும் பரப்பி வருகிறார்.
English Summary
Prime Minister Modi took a decision that has not been taken in 70 years Jagdeep Dhankar