தவறி விழுந்த போது நெஞ்சில் குத்திய ஊசி... ஆபத்தான நிலைக்கு சென்ற பெண்...! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கடந்த 18-ந்தேதி, நாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வீட்டில் பரணியில் உள்ள பொருட்களை எடுத்தப்போது, எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்துவிட்டார். அப்போது தரையில் கிடந்த ஊசி அவரது நெஞ்சில் குத்தி உள்ளே புகுந்துள்ளது. அச்சமயம் அவருக்கு எந்தவிதமான வலியும் ஏற்படாததால் அதற்கு அவர் சரிவர மருத்துவ சிகிச்சை பெற விரும்பவில்லை.

இதனைத் தொடர்ந்து 2 தினங்கள் கழித்து அவருக்கு லேசான மூச்சுதிணறல் மற்றும் நெஞ்சுவலி வரத் தொடங்கியது. நாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 20-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், நெஞ்சின் வழியே இதயம் வரை ஊசி குத்தி இருந்தது தெரிவியவந்தது.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இதயத்தை சுற்றி நீர் நிரம்பி இருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து டீன் அருள் சுந்தரேஷ்குமார் ஆலோசனையின் பேரில், மருத்துவ குழுவினர், பெண்ணின் உடலிலிருந்து ஊசியை, அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு அதன்படி அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்றி அப்பெண்ணை காப்பாற்றினர்.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் தெரிவிக்கையில், “தவறி விழுந்த அந்த பெண்ணுக்கு ஊசி குத்தியது பற்றி முதலில் தெரியவில்லை. உடலில் பல இடங்களில் வலி இருந்ததால், அந்த வலியையும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே, இதயத்தில் குத்தியது துணி தைக்கும் ஊசி என்று தெரியவந்தது.

அது சுமார் 5 செ.மீ. நீள ஊசி ஆகும். அந்த ஊசியை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளோம்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அந்த பெண், எந்தவித பக்க விளைவும் இன்றி நலமாக இருக்கிறார்”  என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman who fell and got stabbed chest went into dangerous situation What happened


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->