கோவிலில் ரீலிஸ் எடுத்த பிக்பாஸ் பிரபலம் - அடுத்த நடந்த பகீர் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரில் புகழ் பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு என்று தனி கட்டுப்பாடுகள் உள்ளன. பக்தர்களும் அந்தக் கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடித்து தரிசனம் செய்து வருவார்கள்.

இந்த நிலையில், பிக்பாஸின் முன்னாள் போட்டியாளர் மற்றும் சமூக ஊடக ஆர்வலரான ஜாஸ்மின் ஜாபர் என்பவர், கோவிலுக்கு சென்று அதனை ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து இந்து மதம் அல்லாத நபரான அவர், கோவில் குளத்தில் இறங்கியதனால், கோவிலில் தூய்மை செய்யும் பணிகளை குருவாயூர் தேவஸ்வம் போர்டு மேற்கொண்டது.
இதன் காரணமாக அதிகாலை 5 மணியில் இருந்து நண்பகல் வரை சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தூய்மைப்படுத்தும் சடங்குகள் முடிந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை நளம்பலம் வழியே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதனால் பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bigg boss celebrity take reels in kerala temple


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->