என்னை அப்படி நினைக்காதீங்க - பரபரப்பை ஏற்படுத்திய பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


பாரத பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- "இது போன்ற கருத்தரங்கு நிகழ்ச்சிகளில் நான் பங்குபெறும்போது, தலைப்பு செய்திகளில் இடம் பெறும் விஷயங்களை நான் பேச வேண்டும் என இங்குள்ளவர்கள் எதிர்பார்ப்பர். 

ஆனால், நான் திட்டங்களின் கெடு தேதி நோக்கி பணியாற்றும் நபர். தலைப்பு செய்தியில் இடம்பெற பணியாற்றும் நபர் அல்ல. ஆகையால், நான் கூறும் சில விஷயங்கள், ஊடகத்தினருக்கு ஈர்ப்பு இல்லாததாக இருக்கலாம். மத்திய அரசின் நலத்திட்டங்களை எல்லாம் விரிவுபடுத்த விரும்புகிறேன். ஆனால், இது குறித்த செய்திகள் ஊடகங்களில் அரிதாக வெளியாகின்றன. 

ஆனால், இந்த திட்டங்கள் சாதாரண மக்களுடன் தொடர்புடையவை. நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் தற்போது 1.25 லட்சம் பதிவு செய்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் ஒருசில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றி பேசுவது பயன் இல்லை என்று நினைத்த அரசியல் கட்சி, தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றி பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi speech in private company programme


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->