வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டியது இளைஞர்களின் கடமை; பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


டெல்லி ஐஐடி கல்வி நிறு​வனத்​தின் 57-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி கலந்துகொண்டார். அங்கு 3,000-க்​கும் மேற்​பட்​டோருக்கு இளநிலை பொறி​யியல் பட்​டங்​களும், 587 பேருக்கு பிஎச்டி பட்​டங்​களும் வழங்​கப்​பட்​டன. மாணவ, மாண​வியருக்கு பட்​டங்​களை வழங்​கி​ கௌரவித்த பிரதமர் மோடி இந்த விழாவில் பேசும் போது கூறியதாவது;

அனைத்து துறை​களி​லும் சுய​சார்பை எட்ட இலக்கு நிர்​ண​யித்து உள்ளதாகவும், இந்த லட்​சி​யத்தை எட்ட இளம் தலை​முறை​யினர் உறு​துணை​யாக இருப்​பார்​கள் என்று தான் நம்​பு​வதக்கவும், அவர்​கள் மீது  மிகுந்த நம்​பிக்கை வைத்​திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இளைஞர்​களின் நலனுக்​காக பல்​வேறு சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்டுள்ளதாகவும், விண்​வெளி துறை தனி​யாருக்கு திறந்​து​விடப்​பட்டு இருக்​கிறது என்று தெரிவித்தார். மேலும், இந்​திய இளைஞர்​கள் உரு​வாக்​கிய ராக்​கெட் அண்​மை​யில் வெற்​றிகர​மாக விண்​ணில் செலுத்​தப்​பட்​டதை விழாவில் நினைவு கூர்ந்தார்.

அதேப்போன்று, செமி கண்​டக்​டர், ட்ரோன் உற்​பத்​தி, செயற்கை நுண்​ணறி​வு, டேட்டா சென்​டர், எரிசக்​தி, குவான்​டம் கம்ப்​யூட்​டிங், மருத்​து​வம், விவ​சா​யம் உட்பட பல்​வேறு துறை​களில் இந்​திய இளைஞர்​கள் பல்​வேறு சாதனை​களை படைத்து வரு​கின்​றதாகவும், இந்த இளம் தலை​முறை​யின​ரால் நமது நாட்​டில் 'ஸ்டார்ட்​அப் புரட்சி' நடை​பெற்று கொண்டிருப்பதாகவும் பாராட்டினார்.

மேலும், இந்​திய இளைஞர்​கள் புதிய ஆராய்ச்​சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்​டும் எனவும், இதற்​காக தேசிய ஆராய்ச்சி அறக்​கட்​டளை உரு​வாக்​கப்​பட்டுள்ளதாகவும் கூறினார். இதற்காக மத்​திய அரசு சார்​பில் ஒரு லட்​சம் கோடி ரூபாய் ஒதுக்​கீடு செய்​யப்​பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

மேலும், ஒவ்​வொரு தலை​முறை​யினருக்​கும் தனிப்​பட்ட கடமை​கள் உள்ளன. நமது முன்​னோர்​கள் நாட்​டின் விடு​தலைக்​காக பாடுபட்டார்​கள். இன்​றைய இளம் தலை​முறை​யினருக்கு மிக முக்கிய​மான கடமை இருக்​கிறது என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டியது உங்​களின் (இளைஞர்களின்) கடமை என்றும், நீங்​கள் 30 வயதை எட்​டும்​போது வாழ்​வின் முக்​கிய​மான கட்​டத்​தில் இருப்​பீர்​கள். அப்​போது வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க உங்​களின் ஆக்​கப்​பூர்​வ​மான பங்​களிப்பை வழங்க வேண்​டும் என்று டெல்லி ஐஐடி கல்வி நிறு​வனத்​தின் 57-வது பட்​டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi says it is the duty of the youth to create a developed India


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->