காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி...! நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள்...! - Seithipunal
Seithipunal


 கடந்த ஓராண்டாக.'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 508 ரெயில் நிலையங்களை ரூ.24,470 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், தெற்கு ரெயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரெயில் நிலையங்களை, பிரதமர் மோடி டெல்லியிலிருந்து, காணொலி காட்சி வாயிலாக, இன்று திறந்து வைக்கவுள்ளார்.

சென்னை பரங்கி மலை,  கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி, திருவண்ணாமலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், போளூர்,ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டை உட்பட 12க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ''மாஹே அம்ரித் பாரத்'' ரெயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கும்.

இந்த ரெயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் விதமாகவும், 5-ஜி சேவை,முகப்புப்பகுதியை மேம்படுத்துவது, ரெயில் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு, நடைமேடைகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் என்று நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகளுடன் ரெயில் நிலையங்கள் புத்துருவாக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi inaugurates 103 Amrit Bharat Railway stations across the country via video conferencing


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->