ஜனாதிபதி முர்முவுக்கு அவமதிப்பு; 'குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது; இது வெட்கக்கேடானது'; மம்தா அரசை கடுமையாக சாடியுள்ள பிரதமர் மோடி ..!
Prime Minister Modi has strongly criticized the Mamata government for insulting President Murmu
மேற்கு வாங்க மாநிலம், சிலிகுரியில் நடைபெற்ற 09-வது சர்வதேச சாந்தல் மாநாட்டில் பங்கேற்கக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்றிருந்தார். இந்த மாநாடு நடைபெற வேண்டிய இடத்தைத் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடைசி நேரத்தில் மாற்றியதோடு, குடியரசுத் தலைவரை வரவேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ அல்லது அமைச்சர்களோ வரவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அத்துடன், போதிய இடவசதி இல்லாத சிறிய இடத்தில் இந்த சாந்தல் மாநாட்டை நடத்தியது குறித்து குடியரசுத் தலைவர் முர்முவே தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அதாவது, "மம்தா எனது தங்கை போன்றவர்; அவர் ஏன் கோபமாக இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை" என்று அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் முதல் குடிமகள் ஜனாதிபதி முறிவுக்கு மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு குறைப்பது இருந்தமை குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது,"இது வெட்கக்கேடானது, இதற்கு முன் நடந்திராதது. ஜனநாயகம் மற்றும் பழங்குடியினச் சமூகங்களின் மேம்பாட்டில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இதனால் மனமுடைந்துள்ளனர்.
பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரே வெளிப்படுத்தியுள்ள இந்த வலியும் வேதனையும், இந்திய மக்களின் மனதில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் அரசு உண்மையிலேயே அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டது. குடியரசுத் தலைவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்புக்கு அவர்களது நிர்வாகமே பொறுப்பாகும்.
சாந்தல் பண்பாடு போன்ற மிக முக்கியமான ஒரு விஷயம் மேற்கு வங்க அரசால் இவ்வளவு அலட்சியமாகக் கையாளப்படுவது துரதிர்ஷ்டவசமானது.
குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது, அந்தப் பதவியின் புனிதத்தன்மை எப்போதும் மதிக்கப்பட வேண்டும். மேற்கு வங்க அரசுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் நல்ல புரிதல் கிடைக்கும் என்று நம்புவோம்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Prime Minister Modi has strongly criticized the Mamata government for insulting President Murmu