மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களின் அரசாங்கத்தை அமைக்க மம்தா முயற்சி; பிரதமர் மோடி குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 23-ஆம் தேதி மற்றும் 29 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமண்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்கு ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ளும் முயற்சியில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தீவிரமாக பணியில் இறங்கியுள்ளது. ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது.

இந்த சூழலில் மேற்குவங்கத்தில் ஊடுருவல்காரர்களின் அரசாங்கத்தை அமைக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தங்களது தோல்வி தவிர்க்க முடியாதது என்பதை உணரத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பூர்வா பர்தமானில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தன்னை காண திரண்டிருந்த தொண்டர்களுடன் பிரதமர் மோடி ரீல்ஸ் வெளியிட்டார். அதேப்போன்று கேஷியாரியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி ஒரு மாபெரும் மோசடி என்று பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன், பாஜகவை எப்படியாவது ஆட்சிக்குக் கொண்டு வர மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து மேற்கொண்ட முயற்சி இது என்றும் விமர்சித்துள்ளார்.

பாஜக பெரும்பான்மையுடன் இருப்பதால், பொதுசிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றலாம் என்றும், நாளை அவர்கள் பெரும்பான்மையில் இல்லாதபோது ​​தாங்கள் இந்த மசோதாவை ரத்து செய்வோம் என்றும் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi alleges that Mamata is attempting to establish a government of infiltrators in West Bengal


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->