உயர்ந்த இலக்கை அடைய பெரிய கனவு காணுவதோடு, அதனை நினைவில் கொள்ளவேண்டும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.!
Prime Minister Modi advises the youth to dream big and remember to achieve high goals
18-வது சர்வதேச வான் இயற்பியல் ஒலிம்பியாட் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாது: 'உயர்ந்த இலக்கை அடையுங்கள், பெரிய கனவு காணுங்கள், நினைவில் கொள்ளுங்கள்' என இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
கடந்த மாதம், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தனது வரலாற்றுப் பயணத்தை முடித்தார். இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம் என்று பேசினார்.
மேலும், உங்களைப் போன்ற இளம் ஆய்வாளர்களுக்கு ஒரு உத்வேகமாகவும் அமைந்தது என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய மோடி, இதுவரை நடந்த ஒலிம்பியாட்களில் இதுவே மிகப்பெரியது என்று அவருக்கு சொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் மற்றும் டாடா ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நன்றியம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், 'உயர்ந்த இலக்கை அடையுங்கள், பெரிய கனவு காணுங்கள், நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவில், வானம் எல்லை அல்ல, அது வெறும் ஆரம்பம்' என்று நாங்கள் நம்புகிறோம் என்று அறிவுரை வழங்கினார்.

அத்துடன், உலகம் முழுவதிலுமிருந்து உங்களைப் போன்ற இளைஞர்களை இந்தியாவில் படிக்க, ஆராய்ச்சி செய்ய அழைத்தோம் என்றும், விண்வெளி அறிவியல் பூமியில் உள்ள மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் எனவும், விவசாயிகளுக்கு இன்னும் சிறந்த வானிலை முன்னறிவிப்புகளை எவ்வாறு வழங்க முடியும் என்பது பற்றியும் குறிப்பிட்டார்.
மேலும், உலகின் மிக உயரமான வானியல் ஆய்வகங்களில் ஒன்றை இந்தியா லடாக்கில் கொண்டுள்ளது என்றும், கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தில், நட்சத்திரங்களுடன் கைகுலுக்கும் அளவுக்கு அது அருகில் உள்ளதாக பெருமிதமாக குறிப்பார். தொடர்ந்து, ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பில் இந்தியா பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்கிறதாகவும், இதை இன்றைய இளைய தலைமுறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டார்.
English Summary
Prime Minister Modi advises the youth to dream big and remember to achieve high goals