புதிய கேமிங் மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்.!!
president approves online gaming bill
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து அந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு சார்பில் சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாக மாறியுள்ளது. இதனால், பணம் செலுத்தி விளையாடும் ரம்மி, போக்கர், பெட்டிங் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை அமலானது.
இந்தத் தடையை மீறி பணம் வைத்து விளையாடினால் ரூ.1 கோடி அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் தளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
president approves online gaming bill