முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் 15528 கைதி எண் ஒதுக்கீடு: 08 மணி நேரம் வேலைக்கு தினசரி கூலி ரூ.524..!
Prajwal Revanna was allotted prisoner number 15528 in the prison and a daily wage of Rs 524 for 08 hours of work
பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது அவர் மீது பதிவு செய்யப்பட்ட 04 பாலியல் வழக்குகளில் ஒரு வழக்கில் ஆயுள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், எஞ்சிய 03 வழக்குகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரஜ்வலுக்கு இன்னும் கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் 15528 என்ற எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர் சிறையில் தினசரி 08 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் அதற்கு தினக்கூலியாக ரூ.524 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர், சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அறையில் அடைக்கப்பட்டது வரை பிரஜ்வல் எப்படி இருந்தார்..? எல்லோரையும் எப்படி எதிர்கொள்கிறார்..? என்பது பற்றிய புதிய தகவல்களை மூத்த சிறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதாவது, கோநீதிமன்ற தண்டனை அறிவிப்புக்கு பின்னர், பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கதறி, கண்ணீர்விட்ட படியே தான் அவர் இருந்திருக்கிறார். மேலும் மனதளவில் உடைந்து போனவராகவே காணப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சிறையில் கைதிகள் அடைக்கப்படும் போது மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவது வழக்கம். அப்படி அவருக்கும் நடத்தப்படும் போது, பிரஜ்வல் மிகுந்த கோபமாகவே இருந்துள்ளதாகவும் மனம் உடைந்து அழுதே விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர், வழக்கு தொடர்பான தான் மேல்முறையீடு செய்ய இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார். மேலும், சிறையில் அதி உயர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் அவர் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், ரேவண்ணாவுக்கு கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உடைதான் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இன்று (ஆக.3) காலை கைதி எண் 15528 ஒதுக்கப்பட்டுள்ளது. தினமும் 08 மணிநேரம் வேலையாளாக பணி செய்ய வேண்டும் என்றும், அதற்கு அவருக்கு தினசரி கூலியாக ரூ.524 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
English Summary
Prajwal Revanna was allotted prisoner number 15528 in the prison and a daily wage of Rs 524 for 08 hours of work