திருமணவிழாவில் மின்தடை.. மாப்பிள்ளையை மாற்றிய மணப்பெண்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மின்தடையால் ஒரே மேடையில் நடந்த சகோதரர்களின் திருமணத்தில் மணமகன்கள் மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜனி அருகே உள்ள அஸ்லானா கிராமத்தில் கோமல், நிகிதா, கரிஷ்மா ஆகிய மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக உறவினர்கள் திருமண மண்டபத்தில் குவிந்தனர். மணமகன் களும் திருமண உடையணிந்து தயாரானார்கள்.

மணமகள்கள் 3 பேரும் தனித்தனி அறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டனர். பின்னர் சகோதரிகள் 3 பேரும் முகத்தை மூடியவாறு மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு மணமகன்கள் அருகே அமர வைக்கப்பட்டனர்.

இதில் சகோதரிகளான மணப் பெண்கள் மூவரும் ஒரே மாதிரியான உடைகள் அணிந்து இருந்தனர். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. பிறந்த நாள் திருமண மண்டபம் முழுவதும் போதிய வெளிச்சமில்லாமல் இருட்டாக காணப்பட்டது. அங்கு ஜெனரேட்டர் வசதியும் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் மணமக்களின் உறவினர்கள் தவித்தனர்.

திருமணத்திற்கான நேரமும் நெருங்கியதால் மணமக்கள் ஒன்றாக அமர வைக்கப்பட்டு அதற்கான சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் மீண்டும் மின்சாரம் வந்தது. அப்போதுதான் இரண்டு சகோதரிகள் மனமகிழ்வுடன் இடம்மாறி அமர்ந்திருந்தது தெரியவந்தது.

இதை பார்த்து மணப்பெண்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் மணமக்களை சரியாக நிறுத்தி திருமணத்தை நடத்தி வைத்தனர். மின்தடையால் ஏற்பட்ட குழப்பம் திருமண மண்டபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power outage at the wedding Brides changed the groom


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->