ஓய்வெடுக்க ஊட்டி வந்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் இரண்டு கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்தது இதனை ஒட்டி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா ஐந்து நாள் பயணமாக ஓய்வெடுக்க மலைபிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா பயணம் வந்துள்ளார். இதற்காக அவர் நேற்று மதியம் 1:30 மணிக்கு பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஊட்டி திண்டுக்கல் மைதானத்தில் வந்து இறங்கினார்.

அப்போது அவருக்கு கர்நாடக மின்சார அமைச்சர் ஜார்ஜ் , சமூக நலத்துறை அமைச்சர் மாதேவப்பா ஆகியோருடன் இருந்தனர். பின்னர் முதலமைச்சர் சித்தராமையா அங்கிருந்து கார் மூலம் ஊட்டி கேர்ள்லாக் சாலையில் உள்ள தனியார் பங்களாவிற்கு சென்றார். அங்கு வருகிற 19ஆம் தேதி வரை 5நாள் ஓய்வெடுக்க உள்ளார். மேலும், சில தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக முதலமைச்சர் வருகை ஒட்டி கர்நாடகா மற்றும் நீலகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Chief Minister Siddaramaiah used to take rest


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->