அரசு‌ பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ஜூலை முதல் மாதம் ரூ.1,000 அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12-ம் வகுப்பு படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாக சந்திப்பில் பேசிய அவர் இந்திய அளவில் உயர் கல்வியில் தமிழ்நாடு அரசு முன்னிலை வகிக்கிறது. ஆனால் 100% உயர்கல்வி என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் வரும் ஜூலை மாதம் முதல் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் மாதம்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக், கலை, அறிவியல் என எந்த உயர் படிப்பு சேர்ந்தாலும் மாணவர்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt announced Rs1000 per month for male students from July


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->