பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு.. 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு.!
Postera paste against PM Modi in Delhi
டெல்லியில் உள்ள பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் 'மோடியை அகற்றுங்கள், நாட்டை காத்திடுங்கள்' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து போலீசார் போஸ்டர்களை அகற்றி வருகின்றனர். அந்தவகையில் சுவர் மற்றும் மின் கம்பங்களில் ஒட்டப்பட்டிருந்த 2,000 மேற்பட்ட போஸ்டர்களை போலீசார் அகற்றினர்.

மேலும், ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போஸ்டர்களுடன் வந்த வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரத்தில் நகரின் பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Postera paste against PM Modi in Delhi