"எதிரிக்கு எதிரி நண்பன்" பாஜகவை ஆதரிக்க தயாரான கட்சி! பாஜகவிற்கு திடீர் அதிஷ்டம்!  - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்றால் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் இல்லாமல் வேறு கட்சிக்கு கூட ஓட்டுப்போடுவோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து,  2019 லோக்சபா தேர்தலில் எதிரெதிர் கட்சிகளாக இருந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், இந்த கூட்டணியும் மக்களிடையே பெரிதாக எடுபடவில்லை. வெற்றி பெற தவறியதால், கூட்டணி முறிந்துவிட்டதாக மாயாவதி அறிவித்தார்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.,க்கள், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினர். அவர்கள் விரைவில் சமாஜ்வாதி கட்சியில் சேரப்போவதாக தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ராஜ்யசபா வேட்பாளர் கவுதமை தாங்கள் ஆதரித்ததாக அளித்த கடிதம் போலியானது எனவும் பல்டியடித்தனர். இதனால் பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டதுடன் மாயாவதிக்கு கடும் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மாயாவதி இன்று பேசுகையில், உத்திரபிரதேச மேலவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க நாங்கள் பாஜகவிற்கு கூட ஓட்டுப்போடுவோம் அல்லது வேறு எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடுவோம் என அறிவித்துள்ளார். ராஜ்யசபா தேர்தல் மட்டுமல்லாது எதிர்காலத்தில் நடக்கும் மேலவை தேர்தலிலும் சமாஜ்வாதியை தோற்கடிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். 

சமாஜ்வாதிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை ஆதரிப்போம் என அறிவித்துள்ளார். மேலும் கடந்த 1995ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றது நான் செய்த மிகப்பெரிய தவறு. கடந்த லோக்சபா தேர்தலில் சமஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும் மாயாவதி கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Political Fight between BSP and SP


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->