மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்... தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி பாராட்டு...!! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சமீபத்தில் மும்பையில் நடந்த பார் கவுன்சில் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என தனது கருத்தை தெரிவித்து இருந்தார். இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பாராட்டை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிட வேண்டியதன் அவசியத்தை பற்றி பேசியுள்ளார். மேலும் அதற்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளார். இது பாராட்டத்திற்குரிய சிந்தனையாகும்.

ஏராளமானவருக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு இது உதவியாக இருக்கும்" என பதிவிட்டதோடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக புதிய கல்விக் கொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இத்தகைய கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMModi praises Chief Justice said SC judgments in regional language


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->