2023 புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும்.. பிரதமர் மோடி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கேக் வெட்டி பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இந்த 2023 ஆண்டில் அனைவருடைய வாழ்விலும் தீமை நீங்கி மகிழ்ச்சி செழிக்க வேண்டும் என அனைவரும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் 2023 ஆங்கில புத்தாண்டுயொட்டி உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் 'பிறந்துள்ள புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும். மகிழ்ச்சி, ஆரோக்கியத்தை அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன். நம்பிக்கை, சந்தோஷம், நிறைய வெற்றிகள் கிடைக்கும் ஆண்டாக இது அமையட்டும்' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi wishes new year


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->