ரஷ்ய அதிபர் புடினுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி: இந்தியா வருமாறு அழைப்பு..!
PM Modi holds talks with Russian President Putin invites him to visit India
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களுக்கான வரியை உயர்த்தியுள்ளதோடு, அபராத வரியும் விதித்துள்ளார். இந்தியா மற்றும் பிரேசிலுக்கு 50 வீதம் வரி விதிப்பு விதிக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார் அப்போது, புடினை இந்தியா வருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் போது உக்ரைன் மோதல் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் குறித்து மோடியிடம் புடின் விளக்கியுள்ளதாகவும், இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்த பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துக்கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புடின் மற்றும் மோடி இடையிலான இரு தரப்பு உறவு குறித்து கலந்துரையாடிய இருவரும், இதனை இன்னும் வலுப்படுத்துவது என உறுதி பூண்ட்டுள்ளதாகவும், இந்தியா - ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வருமாறு புடினுக்கு பிரதமர் அழைப்பும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: எனது நண்பர் புடினுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். உக்ரைன் தொடர்பான சமீபத்திய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இரு தரப்பு உறவுகள் குறித்து கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்தாண்டு இந்தியா வரும் அதிபர் புடினை வரவேற்பதில் ஆர்வமாக உள்ளேன். என்று பிரதமர் மடி பதிவிட்டுள்ளார்.
English Summary
PM Modi holds talks with Russian President Putin invites him to visit India