பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கம்: 15 வயது சிறுமி பகிரங்க மன்னிப்பு; வழக்கு வேண்டாம் எனப் பிரதமர் நெகிழ்ச்சி!
PM Modi Forgives 15-Year-Old Girl Who Chanted Slogans Against Him Minor Issues Public Apology Video
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) போராட்டத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறாகப் பேசிய நோய்டாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி இணையத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
வழக்குப்பதிவும் பிரதமரின் பெருந்தன்மையும்
சிறுமி மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் நோய்டாவில் 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' பதியப்பட்டு, மேல் விசாரணைக்காக டெல்லி பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிரதமர் மோடி, "இந்த அவதூறுகள் என்னை ஆழமாகக் காயப்படுத்தினாலும், இளைஞர்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளச் சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். நான் அச்சிறுமியை மன்னிக்கிறேன்," எனக் குறிப்பிட்டார்.
சிறுமியின் மன்னிப்பு & CJP விளக்கம்
பிரதமரின் செய்தி வெளியான பின் சிறுமி வெளியிட்ட வீடியோவில், "நண்பர்களுடன் சென்றபோது சிலரின் தூண்டுதலால் உணர்ச்சிவசப்பட்டுத் தவறாகப் பேசிவிட்டேன். இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறாக இருக்கும்," எனக் கைகூப்பி மன்னிப்புக் கோரினார்.
இதனிடையே, அவதூறு வார்த்தைகளை ஏற்க முடியாது என்றாலும், இதுபோன்ற கருத்துகளுக்குக் காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது பேச்சு சுதந்திரத்தைப் பாதிக்கும் என CJP கட்சி தெரிவித்துள்ளது.
English Summary
PM Modi Forgives 15-Year-Old Girl Who Chanted Slogans Against Him Minor Issues Public Apology Video