நாட்டின் முதல் தானியங்கி துறைமுகம்:நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு  திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுக பணிகள் ரூ.8ஆயிரத்து 900 கோடி மதிப்பீட்டில் மூன்று கட்டங்களாக நடைபெற்றுவந்தது.இந்த துறைமுகத்தில் கடந்த வருடம் செயல்பாட்டுக்கு வந்த சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.தற்போது வரை பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது . இந்த திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று மாலை 7.35 மணியளவில்  தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர் இரவு கவர்னர் மாளிகையில் தங்கினார்.

இந்தநிலையில் விழிஞ்சம் சர்வதேச துறைமுக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு சென்றார். பின்பு அங்கு நடைபெற்ற துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரமாண்ட சரக்கு கப்பலான எம்.எஸ்.டி. செலஸ்ட்னோ மரேஸ்காவை வரவேற்று விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்பு விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.

இந்த விழாவில் கேரள மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால், மத்திய மந்திரிகள் சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன், கேரள துறைமுக மந்திரி வி.என். வாசவன், மாநில மந்திரிகள் சிவன்குட்டி, அனில், சாஜி செரியன், முன்னாள் மத்திய மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், சசிதரூர் எம்.பி., அதானி குழும தலைவர் கவுதம் அதானி, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், துறைமுக நிர்வாக இயக்குனர் கரண் அதானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi dedicates Indias first automated port to the nation


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->