மகாராஷ்டிரா பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு.. பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.!
Pm Modi Condolences about Maharashtra bus accident
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் பகுதியில் இருந்து புனே நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலை அருகே புல்தானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை பேருந்தில் இருந்து 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

6-லிருந்து 8 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ள பிரதமர் மோடி இந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், இதில், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Pm Modi Condolences about Maharashtra bus accident