மத்திய பிரதேசம் : கோவிலின் மீது விமானம் மோதி விபத்து - விமானி பலி - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசத்தில் பயிற்சியின் போது விமானம் கோயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள தும்ரி கிராமத்தில் இன்று அதிகாலை பயிற்சியின் போது விமானம் ஒன்று கோவிலின் மீது மோதி விபத்துக்குள்ளது. இந்த விபத்தில் விமானம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதைப் பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோசமான வானிலை மற்றும் அப்பகுதியில் நிலவிய பனிமூட்டம் ஆகியவை விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரேவா எஸ்பி நவ்நீத் பாசின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pilot Dead After Plane Crashes Into Temple in madhya pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->