PF பணம் பெற ஆதாரை ஆவணமாக ஏற்க முடியாது.!! ஷாக் கொடுத்த ஆணையம்.!! - Seithipunal
Seithipunal


நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. பணி நிறைவு அல்லது இடையில் பணியைத் துறந்தால் தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.

அதற்காக அவர்கள் நிரந்தர வங்கிக் கணக்கு எண் ஆதார் போன்ற சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக பிறந்த தேதிக்கான ஆவணம் சமர்ப்பிப்பது கட்டாயம். 

இதற்கு முன்னதாக ஆதார் அட்டை பிறந்த தேதிக்கான சான்றிதழாக சமர்ப்பிக்கப்பட்ட வந்த நிலையில் அதனை தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நீக்கி உள்ளது. 

ஆதார் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அடையாளச் சான்றாகவும் முகவரி சான்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் பிறந்த தேதி ஆதாரமாக ஆதாரை ஏற்கக் கூடிய பட்டியலில் இருந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நீக்கி உள்ளது.

ஆதார் அட்டையில் பிறந்த தேதி புதுப்பித்தல் திருத்தம் செய்வதற்கான வசதி உள்ளதால் அதனை ஏற்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PF commission refused Aadhar as date of birth document


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->