பெட்ரோல் டேங்கர் லாரி விபத்து.. குடம் குடமாக பெட்ரேல் பிடித்து செல்லும் மக்கள்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் எண்ணெய் டேங்கர் லாரி பெட்ரோல் பங்க்களில் இறக்குவதற்காக கம்மம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

தலாம்பாடு அருகே டேங்கர் லாரி வந்த போது எதிர்திசையில் வந்த மினி வேன் மோதியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையை விட்டு விலகி ஓரத்தில் நின்றது.

இந்த விபத்தில் டேங்கர் லாரியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்த தகவல் பரவியதும், அந்த கிராமத்தில் வசிப்பவர்களும், அவ்வழியாக சென்றவர்களும் திரளாக வாளிகள், கேன்கள், பாட்டில்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தங்களால் முடிந்த அளவு பெட்ரோலை பிடித்து சென்றனர். 

இதனை அப்பகுதியில் இருந்த சிலர் தங்கள் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தனர். டேங்கர் லாரி ஓட்டுநர் எரிபொருள் கசிவைத் தடுக்க முயன்றதுடன், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் டேங்கர் லாரியை நெருங்க வேண்டாம் என்று எச்சரித்தார், ஆனால் யாரும் கேட்கவில்லை.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Petrol tanker lorry accident in Telungana


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->