அன்று பானிப்பூரி விற்றவன் இன்று இஸ்ரோ பணியாளர்...! எப்படி...?
person who sold panipuri that day is an ISRO employee today
மகாராஷ்டிரா கோண்டியா மாவட்டத்திலுள்ள நந்தன் நகரைச் சேர்ந்தவர் ''ராம்தாஸ்'' என்பவர். அன்று பானிப்பூரி (கோல்கப்பா) விற்பனையாளராக இருந்த இவர், தற்போது ISRO -வில் தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் பணிபுரிகிறார்.அவரது தந்தை டோங்கர்கான் ஜில்லா பரிஷத் பள்ளியில் பியூனாகப் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. மேலும் இவர் மோசமான நிதி நிலைமை காரணமாக, தொழில்நுட்ப படிப்புக்கு பதிலாக பி.ஏ. படித்தார். அதன் பிறகு அவரால் படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும், நிதி நெருக்கடி காரணமாக, பகலில் பானிப்பூரி விற்றும், இரவில் படிப்பதன் மூலமும் ''ராம்தாஸ்'' தனது இலக்கை நோக்கி முன்னேறினார்.
இவர் டிரோராவிலுள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் (ஐடிஐ) சேர்ந்து பம்ப் ஆபரேட்டர்-கம்-மெக்கானிக் படிப்பை முடித்தார். அங்கு நீர் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக்கொண்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO பயிற்சிப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டது.
அதற்கு விண்ணப்பித்து, 2024 ஆம் ஆண்டு நாக்பூரில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், ஆகஸ்ட் 29, 2024 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் திறன் தேர்வுக்கு அழைக்கப்பட்டார்.
அந்த திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் ISRO -வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.மே 19, 2025 தேதியிட்ட சேர்க்கை கடிதத்தின் அவரை தேடி வந்தது. இதன்மூலம் ராமதாஸ், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ISRO-வின் விண்வெளி மையத்தில் பம்ப் ஆபரேட்டர்-கம்-மெக்கானிக்காக தற்போது சேர்ந்துள்ளார்.
English Summary
person who sold panipuri that day is an ISRO employee today