சித்த மருத்துவ முறையை நோக்கி மக்கள் செல்ல வேண்டும் - யோகி ஆதித்யநாத்..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெங்களூருவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிநார்.அப்போது அவர் பேசியதாவது:- 

மனித இனத்திற்கே கொரோனா தொற்று பெரும் சவாலாக விளங்கியது. இந்தியா, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்ததை, இந்த உலகமே பார்த்து வியந்தது. அதற்கு முக்கிய காரணம் யோகா மற்றும் நமது நாட்டின் பாரம்பரியமிக்க மருத்துவமும் தான். 

நாம் அனைவரும் பூரணமாக குணமடைய, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, ஆயுர்வேதம், சித்த மருத்துவ முறையை நோக்கி மக்கள் செல்ல வேண்டும். கர்நாடகம் எப்போதும் பிரச்சினையை தீர்க்கும் மாநிலமாகவே இருந்துள்ளது. வனவாசத்தின் போது ராமருக்கு அனுமன் உதவினார். 

இது ராமராஜ்ஜியம் உருவாக அடித்தளமாக இருந்தது. பெங்களூரு தகவல் தொழில் நுட்பத்தின் தலைநகராக இருந்து வருகிறது. தற்போது உலகின் பாரம்பரிய மருத்துவத்தின் மையமாகவும் வளர்ந்து வருகிறது. இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கை அடைய மக்கள் தங்கள் பணியில் அதிக நிபுணத்துவத்தை கொண்டு வர வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples going to siddha medicine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->